Zomato IPO

    நமக்கு தெரிந்து பிரபலமான Food  delivery  நிறுவனமான Zomato நிறுவனம் IPO வை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தனது தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களையும், உணவு விடுதிகளையும் ( Restaurants ) இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது.இந்நிறுவனம் 520  க்கு மேலான நகரங்களில் 3,89,000  க்கு மேலான உணவு விடுதிகளுடன் இணைந்து இதன் சேவையை வழங்கி வருகிறது.  

 Zomato  தளத்தின் மூலம் நாம் உணவு விடுதிகளை தேடவும், உணவு ஆர்டர் செய்ய, டேபிள் புக் செய்ய, உணவிற்கான பணத்தை செலுத்த மற்றும் உணவை பற்றிய கருத்துக்களை (Review) பதிவு செய்ய பயன்படுத்தலாம்.

Zomato  IPO  வின் அளவு மற்றும் முக்கிய தேதிகள்::

     Zomato  நிறுவனம்  Rs  9327  கோடிக்கான  IPO  வை அறிவித்துள்ளது. இதில் 9000 கோடி மதிப்பிலான புதிய பங்குகளையும் (fresh issues), Rs 327 கோடிக்கான பங்குகளை Info edge  நிறுவனம் விற்பனை செய்கிறது. 

Zomato IPO listing dates 

    Zomato IPO வானது 14 ஜூலை 2021 நாள் BSE மற்றும் NSE  இல் தொடங்க உள்ளது. 16 ஜூலை 2021 இல் முடிவடையும். இதற்கான Allotment ஜூலை 22  இல் முடிவு செய்யப்பட்டு. ஜூலை 27 ஆம் தேதி லிஸ்டிங் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் IPO விலை Rs 72 முதல் Rs 76 ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 1 லாட் வாங்க Rs 14,820  தேவைப்படும்.  அதிக பட்சமாக ஒரு நபர்  13  லாட் வாங்கலாம்.


Zomato IPO listing dates

Zomato  IPO  subscribe  செய்யலாமா?

      Zomato  நிறுவனம் பிரபலமான நிறுவனம் என்பதாலும்  இதன் அறிமுக விலை Rs 72 - 76  ஆக இருப்பதாலும் அதிகளவிலான ரீடைல் இன்வெஸ்டர்கள் subscribe செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக பெரும்பாலான உணவு நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் Zomato நிறுவனமும் அடங்கும்.கடந்த மூன்று ஆண்டுகளாக நஷ்டத்திலேயே உள்ளது. கடந்த ஆண்டு FY21  இல்  Rs 816.43  கோடி நஷ்ட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.         

Zomato IPO Grey market Premium (GMP):

       இந்த IPO Grey மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படி  பிரீமியம் 26 % ஆக Trade ஆகி கொண்டிருக்கிறது.  அதாவது Zomato  IPO  விலை Rs 92  முதல் 96  ஆக உள்ளது.

இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe