Divis Laboratories:
Divis laboratories என்பது ஒரு மிகச்சிறந்த PHARMA நிறுவனம் ஆகும். இது கடந்த 3 ஆண்டுகளில் 314.7% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 108.2% உயர்ந்துள்ளது. ௦.43% டிவிடெண்ட் அளித்து வருகிறது.இந்த நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் லிஸ்டிங் செய்தது முதல் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து லாபம் தரும் நிறுவனமாக உள்ளது. இதில் ப்ரொமோட்டர் பங்கு 51.95 % உள்ளது குறிப்பிடத்தக்கது. Divis Laboratories நிறுவன ஸ்டாக்கின் ROCE -26.06 % ROE -21.57 % ஆகவும் உள்ளது. ஆகவே இந்த நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தரும் என கணிக்கப்பட்டுள்ளது.
TATA Consumer Products:
TATA consumer products நிறுவனமானது FMCG நிறுவனங்களில் ஒன்று. உலகளவில் டீ தயாரிக்கும் நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. Tata consumer products நிறுவனம் டாடா டீ, டாடா காபீ, டாடா உப்பு மற்றும் குடிநீர் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்தியாவின் உப்பு விற்பனையில் 60% பங்கினை TATA consumer Products கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 192.3% மும், கடந்த ஒரு ஆண்டில் 80.4% மும் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய FMCG நிறுவனமாக மாறும் என கருதப்படுகிறது.இது 0.47% டிவிடெண்ட் அளித்து வருகிறது.
Indiamart Intermesh :
Indiamart Intermesh நிறுவனமானது 1999 இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனமாகும். இது முழுக்க ஆன்லைன் சேவையை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். இது B-B எனப்படும் இணையவழி பொருட்களை விற்றுவருகிறது. கடந்த ஆண்டில் 5.2% விற்பனை முந்திய ஆண்டினை காட்டிலும் அதிகரித்துள்ளது.இதன் மூலம் PAT 88% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் ஸ்டாக் மதிப்பு 229 % வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2019 ஆண்டு பங்குச் சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Indiamart share price லிஸ்டிங் செய்யப்பட்டபொழுது Rs 2000 ஆக இருந்தது.இதன் விலை Rs 9950 வரை சென்று தற்பொழுது Rs 7340 ஆக டிரேட் ஆகி கொண்டுள்ளது.




0 கருத்துகள்