Advertisement

Long term investment stocks in 2021

  கீழே கொடுக்கப்பட்டுள்ள 10  நிறுவனங்களின் ஸ்டாக்கள் 2021  இல்   நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

Infosys :

          இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டின் வளர்ச்சி 12 - 14 %  ஆக உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும்  நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய ஆடர்களை தன் வசம் வைத்துள்ளது.  IT துறையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக கடந்த சில ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனம் இருந்து வருகிறது.

Infosys
Infosys

ITC:

    ITC  நிறுவனத்தின் பங்கானது தற்போது  குறைந்த விலையில்  கிடைக்கிறது. இது வரும் காலங்களில் அதிக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இது அதிக dividend  தரும் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் அதிக அளவு வீழ்ச்சி ஆடிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ITC
ITC

TATA Motors:

    டாடா நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் Passenger  Vehicle விற்பனை அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பை தொடங்கி அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. Harrier, SAFARI போன்ற புது வகை மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே வரும் காலங்களில் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

TATA Motors
TATA Motors

  Reliance Industries:

                                Reliance  Industries இன் பங்கு விலை கடந்த சில ஆண்டுகளில் இரட்டிப்பானது. தற்பொழுது டிஜிட்டல் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. Jio  Fibre யை இந்த ஆண்டு தொடங்கி உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியிலும் தொடந்து முன்னணி வகிக்கிறது. 

Reliance Industries
Reliance Industries

ICICI Bank:

     ICICI  bank இன் பங்கின் விலை இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. Covid  -19  காலத்திலும்  இந்த வங்கியின் Non  Performing  asset  இன் மதிப்பு குறைவாகவே உள்ளது. Valuation னும் ஸ்ட்ரங்காக உள்ளதால் அடுத்து வரும் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் எதிர்பார்க்கப் படுகிறது. 


ICICI BANK
ICICI BANK


   SBI Bank:

                    SBI bank உடன் மற்ற வங்கிகளை கடந்த ஆண்டில்  இணைந்ததால் அதிக Non performing  asset  உடன் இயங்கி வந்தது. இருப்பினும் தற்பொழுது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. Insurance , Credit  cards  போன்ற மற்ற பிரிவுகளில் லாபம் ஈட்டி வருகிறது.

SBI BANK
SBI BANK

Dabur India:

         Dabur India நிறுவனம் அதிக அளவிலான டிஸ்ட்ரிபியூட்டர்களை உலகம் முழுவதும் நிறுவி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை வரும் காலங்களில் அதிகரிக்கும் என Brokerage   நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.இது ஒரு FMCG ( Fast  moving consumer goods )  நிறுவனம் ஆகும். 

Dabur India
Dabur India

Bajaj Auto:

     பஜாஜ் நிறுவனம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த  காலாண்டில் 26.12 % வளர்ச்சி அடைந்துள்ளது. KTM நிறுவனத்துடன் கூட்டாக பல புது மாடல்களை அறிமுகபடுத்திவருகிறது இதன் பங்கு மதிப்பானது வரும் காலங்களில் நல்ல வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj Auto
Bajaj Auto

Sun pharmaceutical Industries

    Sun pharmaceutical நிறுவனத்தின் மருந்துகளின் விற்பனை அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சி அமெரிக்காவில்  தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. COVID -19 காரணமாக Pharma  நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலயில். இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை வரும் மூன்று முதல் நன்கு ஆண்டு கால அளவில் அதிக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sun Pharma
Sun Pharma Industries



Larsen & Turbo Industries:

    இந்நிறுவனம் பொறியியல் , கட்டிடம் , தயாரிப்பு போன்ற பல பகுதிகளை கொண்டது. இதன் debt மதிப்பை குறைக்க மேனேஜ்மென்ட் முடிவு செய்துள்ளது. லாபம் தராத தொழில்களில் இருந்து வெளியேறி வருகிறது. நிறைய பொது துறை நிறுவனங்களின்  ஆர்டர் களை தன் வசம் வைத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அதிக அளவிலான லாபம் தரும் பங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Larsen & Turbo Industries

Disclaimer : நங்கள் SEBI ஆள் அங்கீகரிக்கப்பட்ட Stock  advisor  இல்லை  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுவதும் எங்களுடைய analysis  மற்றும் research  அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

கருத்துரையிடுக

0 கருத்துகள்