ஒரு நிறுவனம் தனது லாபத்தில் இருந்து ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு பிரித்து வழங்குவதே டிவிடெண்ட் (Dividend) ஆகும். தொடர்ந்து பல வருடங்களாக அதிகமாக டிவிடெண்ட் தரும் பங்குகளை வாங்குவதே நல்லது. இதன் மூலம் வங்கியில் நிரந்தர சேமிப்பின் ( Fixed deposit) மூலம் கிடைக்கும் வட்டியை விட அதிகளவு பெற முடியும்.
![]() |
| டிவிடென்ட் |
பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள் நிரந்தர சேமிப்பின் ( Fixed deposit) மூலம் பெரும் வட்டி விகிதத்தை விட அதிகளவு டிவிடெண்ட் (Dividend) தொகையாக அளிக்கின்றன. அது மட்டுமின்றி நாம் வாங்கிய பங்கின் விலை உயருவதன் மூலமும் நாம் லாபம் பெற முடியும்.
டிவிடெண்ட் தொகையானது அந்நிறுவனத்தின் இயக்குநர்களால் முடிவு செய்யப்படுகிறது. டிவிடெண்ட் அழிப்பது கட்டாயம் அல்ல. லாபத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே டிவிடெண்ட் அழிக்கும்.
டிவிடெண்ட் (Dividend) தொகையை பெறுவது எவ்வாறு ?
டிவிடெண்ட் தொகையை பெற அந்நிறுவனத்தின் பங்குகளை ரெகார்ட் தேதி அன்று நாம் நமது டீமேட் கணக்கில் ஹோல்டில் வைத்திருக்க வேண்டும். Ex date மற்றும் ரெகார்ட் தேதி ஆனது டிவிடெண்ட் தொகை அறிவிக்கப்படும் பொழுதே அறிவிக்கப்படும்.டிவிடெண்ட் தொகை நேரடியாக நமது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
டிவிடெண்ட் Ex date மற்றும் ரெக்கார்ட் தேதி என்றால் என்ன?
ரெக்கார்ட் தேதி என்பது நிறுவனம் டிவிடெண்ட் வழங்க தனது பங்குதாரர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாள் ( பதிவு செய்யும் நாள்) ஆகும். Ex date அல்லது Ex dividend date என்பது ரெகார்ட் தேதிக்கு முந்தைய வர்த்தக நாள் ஆகும்.
டிரேடிங்யில் ஈடுபடுபவர்கள் டிவிடென்ட்யை பெற Ex date அல்லது அதற்க்கு முந்தைய நாள் வாங்கி ரெக்கார்ட் தேதி முடிந்தவுடன் விற்று விடுவார்கள். இதன் மூலமும் நாம் அதிக லாபம் அடைய முடியும். டிவிடெண்ட்ற்கு தகுதி பெற நாம் அந்த பங்கினை ஆண்டு முழுவதும் வைத்திருக்க தேவை இல்லை. ரெக்கார்ட் தேதி அன்று நமது டீமேட் கணக்கில் வைத்திருந்தால் போதுமானது.
டிவிடெண்ட் தொகையை எவ்வாறு கணக்கிடுவது?
டிவிடெண்ட் தொகையானது அந்நிறுவனத்தின் Face Value வின் மடங்குகளாக வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை Rs 100 எனவும் Face Value Rs 2 என எடுத்துக்கொள்வோம். அந்நிறுவனம் 500 % டிவிடெண்ட் என அறிவித்தால், Face Value வில் 100 % என்பது Rs 2 எனில் 500 % என்பது Rs 10 ஆகும். ஆகவே 10 ருபாய் டிவிடெண்ட் ஆக பெறுவீர்கள்.
நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இன்டெரிம் டிவிடெண்ட் மற்றும் பைனல் டிவிடெண்ட் என ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறையும் வழங்கலாம்.இது அந்நிறுவனத்தின் லாபத்தை பொறுத்து மாறுபடும்.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

0 கருத்துகள்