Advertisement

கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்றால் என்ன ? அதில் எவ்வாறு முதலீடு செய்வது ?

 கிரிப்டோகரன்சி ( Cryptocurrency):

what is cryptocurrency? Cryptocurrency endral enna
Cryptocurrency 

                

    கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்பது ஒரு  டிஜிட்டல் கரன்சி ஆகும். இதை நாம் பார்கோவோ அல்லது தொடவோ முடியாது. இது டிஜிட்டல் வேலட்களில் மதிப்பாக மட்டுமே பார்க்க இயலும். இது நாடுகளுக்கிடையேயான அதிவேக பண பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டது. முதன் முதலில் பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டது. ஒரு பிட்காயினின் தற்போதைய மதிப்பு சுமார் Rs 32,62,000 ஆக வர்த்தகமாவது குறிப்பிடதக்கது. தற்பொழுது 8000க்கு மேலான கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.  கிரிப்டோ கரன்சிகள் பிளாக் செயின் எனும் தொழில் நுட்பம் மூலம் உருவாக்கபடுகின்றன. பிளாக் செயின் தொழில் நுட்பம் அதிக பாதுகாப்புடையது. ஹேக்கர்களால் இதை ஹேக் செய்ய இயலாத வகையில் உள்ளது. பிளாக் செயின் தொழில் நுட்பம் தெரிந்த யாராலும் புதிய  கிரிப்டோ கரன்சிகளை உருவாக்க இயலும்.

கிரிப்டோகரன்சியில்  டிரேடிங் அல்லது இன்வெஸ்ட் செய்ய முடியுமா?

  கிரிப்டோகரன்சியில்  ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் மற்றும் இன்வெஸ்ட் செய்வது போலவே செய்ய முடியும். ஷேர் மார்க்கெட்டில் Zerodha, Upstox போன்ற புரோக்கர் தளங்கள் உள்ளது போலவே கிரிப்டோ கரன்சி வாங்க விற்க இந்தியாவில்  Wazirx போன்ற தளங்கள் உள்ளன. இதில் வேலட்  மற்றும் எக்ஸ்சேஞ்சுகள்  உள்ளன. எக்ஸ்சேஞ்சுகள் மூலம் நாம்  கிரிப்டோ கரன்சிகளை   வாங்கவும் விற்கவும் இயலும். இதில் வாங்கும் கிரிப்டோ கரன்சிகளை வேலட்களில் சேகரித்து வைக்கலாம். 

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் உள்ள நன்மைகள்:

    ஷேர் மார்க்கெட்டில் நம்மால் வாரத்தில் ஐந்து நாட்கள் மற்றும் மார்க்கெட் நேரத்தில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும்.  ஆனால் ஷேர் மார்க்கெட்  போன்று அல்லாமல் கிரிப்டோ கரன்சிகளை  அனைத்து நாட்களிலும்  24X7  வாங்கி விற்கலாம். ஆகவே எந்த நேரத்திலும் நாம் அதை விற்று இந்திய ரூபாயாக  மாற்றிக்கொள்ளலாம்.

    கிரிப்டோகரன்சிகளை நாம் வாங்கிய உடன் நமது கணக்கில் வந்து சேரும். உடனடியாக நம்மால் விற்கவும் இயலும். இது குறுகிய கால அளவில் அதிக அளவிலான லாபத்தை தர கூடியது. இதன் மதிப்பு  ஒரே நாளில் இரட்டிப்பாகவும் கூடும். இதில் நம்மால் குறைந்த அளவிலான பணத்தை கொண்டும் வர்த்தகம் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக 0.0001 என்ற எண்ணிக்கையிலான காயின்களை வாங்க முடியும்.

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் உள்ள தீமைகள்:

    கிரிப்டோகரன்சிகலின் மதிப்பு  அதிகப்படியான  ஏற்ற இறக்கம் கொண்டது. ஆகவே அதிகமான ரிஸ்க் உடைய வர்த்தகமாகும். இது ஒரே நாளில் இரட்டிப்பாவது மட்டும் அல்லாமல் ஒரே நாளில் இதன் மதிப்பு பாதியாக குறையவும் வாய்ப்பு உள்ளது. இது ஷேர் மார்க்கெட்டில் உள்ள நிறுவங்களின் பங்குகளை போன்று அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்களை பொறுத்து மாறாமல் எந்த ஒரு காரணம் இன்றியும் அதன் மதிப்பு மாறும். சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன்  மஸ்க் பிட்காய்னை   ஆதரிப்பதாகவும் அதில் இன்வெஸ்ட் செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. தற்பொழுது அதன் மதிப்பு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     நம்மிடம் உள்ள ரூபாய்கள் அரசாங்கத்தாலும், ரிசர்வ் வங்கிகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால்  கிரிப்டோகரன்சிகள் எந்த ஒரு நாட்டு அரசாலும் அல்லது வங்கியாலும் அங்கீகரிக்கப்படாதது.ஷேர் மார்க்கெட் ப்ரோக்கர்கள்  போன்று இல்லாமல் கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்சுகள் முதலீட்டாளர்களின் அபகரிக்க வாய்ப்புள்ளது. இதற்க்கான சட்டங்கள் உலகளவில் இன்னும் வரையறுக்கப்படவில்லை.

பிரபலமான 10 கிரிப்டோகரன்சிகள்:

1. Bitcoin

2. Ethereum

3. XRP Ripple

4. Cardano

5. Stellar

6. USD Coin

7. Chainlink

8. Uniswap

9. Polkadot

10. Bitcoin Cash

இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

கருத்துரையிடுக

0 கருத்துகள்