Advertisement

Infosys ஸ்டாக் மதிப்பு FY22 இல் இவ்வளவு உயருமா? Target price எவ்வளவு?- Get profit tamil



    இந்தியாவின் மிகப்பெரிய ஐடி  நிறுவனமான இன்போசிஸ்  ஸ்டாக் விலை தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்றத்தில் உள்ளது. இந்நிறுவன பங்குகள் 2021  இல் இதுவரை மட்டும் 26 % உயர்ந்துள்ளது.  கடந்த 31  December  2020-ல்  Rs 1255.8 ஆக இருந்த  இதன் மதிப்பு 30 June 2021 இல் Rs 1580 ஆக அதிகரித்துள்ளது.வரும் நிதி ஆண்டில் FY22 15.5% Revenue Growth எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே ஸ்டாக் விலையும்  தொடர்ந்து அதிகரிக்கும் என கருதப்படுகிறது.


  Morgan Stanley நிறுவனத்தின் கருத்து :

    மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) என்ற புரோக்கரேஜ்  நிறுவனம் இன்போசிஸ் ஸ்டாக் விலை  FY22 இல்  தற்போதய நிலையில் இருந்து 14 % உயரும் எனவும் டார்கெட் பிரைஸ் (Target  Price )  Rs 1800  எனவும் கணித்துள்ளது. Infosys நிறுவனம் இந்த ஆண்டு நிறைய ஆர்டர்களை  பெற்றிருப்பதாலும். இன்னும் நிறைய ஆர்டர்கள்  வர இருப்பதாலும். மற்ற  இந்திய நிறுவங்களை ஒப்பிடும் போது இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதாலும். தாங்கள் 14 % உயரும் என கருதுவதாக Morgan  stanley  நிறுவனம் அறிவித்துள்ளது.

   

Sharekhan நிறுவனத்தின் கருத்து :

     இந்திய புரோக்கரேஜ் நிறுவனமான Sharekhan ஆனது Infosys நிறுவன ஸ்டாக் Target Price Rs 1700  ஆக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு Infosys  revenue அதிக அளவு உயரவில்லை அதற்கு COVID -19  இரண்டாவது அலை ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆகவே நங்கள் தொடர்ந்து Infosys நிறுவன ஸ்டாக்களை வாங்க ( Buy  Rating ) அறிவுறுத்துவதாகவும் கூறி உள்ளது.

இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

கருத்துரையிடுக

0 கருத்துகள்