பங்கு (Share) என்றால் என்ன ?
பங்கு என்பது நிறுவனத்தின் மூலதனத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து. அந்த ஒரு சிறு பகுதியினையே பங்கு(Share) என்கிறோம். பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் முதலாலி / ஷேர் ஹோல்டர் ஆகுவீர்கள்.
பங்குச் சந்தை என்பது பப்ளிக் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி விற்கும் ஒரு தளம் ஆகும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகுவீர்கள். அதன் மூலம் நிறுவனத்தில் ஏற்படும் லாபத்தினை டிவிடெண்ட் ஆக பெற முடியும். கம்பெனியின் வளர்ச்சியை பொறுத்து பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆகவே பங்கின் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் அதனை வாங்கி சிறிது காலம் பொறுத்து விலை உயர்ந்த பின் விற்று லாபம் பெறலாம்.
இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. அவை
1 . NSE -NATIONAL STOCK EXCHANGE
2 . BSE -BOMBAY STOCK EXCHANGE
NSE இல் உலக முழுவிதிலும் இருந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். BSE இல் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள்.பெரும்பாலும் முதலீட்டளர்கள் NSE இல் முதலீடு செய்வதையே விருப்பிகிறார்கள். ஏனெனில் உலக முதலீட்டளர்கள் முதலீடு செய்வதன் மூலம் பங்குகளின் விலையில் NSE இல் அதிக பாதிப்பு இருக்கும்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எவ்வாறு?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய Demat Account தொடங்க வேண்டும். Demat Account மூலம் Shares, Bonds, Mutual funds, Goverment securities களை வாங்கிவிற்க முடியும். Demat Account ஆள் Shares களை எளிதாக வாங்க விற்க மற்றும் Hold செய்ய இயலும். Zerodha, ICICI Direct போன்ற புரோக்கர் களின் மூலம் நாம் demat account தொடங்க முடியும்.
Demat account சில brokers களிடம் இலவசமாகவும் சில brokers களிடம் முன்பணம் செலுத்தியும் Open செய்ய வேண்டும். இதற்க்கு தேவையான டாக்குமெண்ட்ஸ்களை ஆன்லைன் மூலம் அனுப்பி அக்கௌன்ட் தொடங்கலாம்.
இதற்க்கு தேவையான documents:
1. PAN card.
- 2. Aadhaar Card(Only for an online account opening).
- 3.Cancelled cheque/Bank statement to link your bank account.
- 4. Photo.
- 5. Income proof (Form-16/IT acknowledgement copy/6-month Bank statement/Latest salary slip).
Demat account மூலம் ஷேர் களை வாங்க மற்றும் விற்க சிறிதளவிலான Brokerage தொகை செலுத்த வேண்டி இருக்கும்.பங்குச் சந்தைகளில் ரூ 100 முதல் இன்வெஸ்ட் செய்யலாம்.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe


0 கருத்துகள்