Advertisement

How to invest in stocks in tamil? Guideline for new investor...

     நீங்கள் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்ய ரெடியாக உள்ளவரா? ஆனால் எந்த ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? நீங்கள் சரியான தளத்திற்கு வந்துள்ளீர்கள்.

Nifty 50

    இது உங்களை ஆச்சர்யப்படுத்தலாம். நீங்கள் 50 வருடங்களுக்கு முன்பு RS.1,000 இந்தியன் ஷேர் மார்க்கெட் இல் இன்வெஸ்ட் செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று RS 12,00,000 ஆக இருந்திருக்கும். ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்வது மிகவும் சரியான நீண்ட கால முதலீடாக கருதப்படுகிறது. நாம் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. முதலீடு செய்வதற்கு முன்பு அதை பற்றி சிறுதளவு அறிந்திருப்பது நல்லது.

How to invest in stocks?

வழிமுறைகள்:

1 முதலீட்டு அணுகுமுறை ( Investing Approach) முடிவு செய்ய வேண்டும்.

2 எவ்வளவு பணம் இன்வெஸ்ட் செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்

3 இன்வெஸ்ட் செய்ய டீமேட் அக்கௌன்ட் தொடங்க வேண்டும்

4 பல்வேறு நிறுவன பங்குகளில் இன்வெஸ்ட் (Diversify investment) செய்ய தொடங்க வேண்டும்.

5 தொடர்ச்சியாக இன்வெஸ்ட் (Continuous Investment) செய்து கொண்டே இருக்க வேண்டும்.

1.முதலீட்டு அணுகுமுறை Investing approach:

   நீங்கள் எந்த வகை முதலீட்டாளர் என்பதை முடிவு செய்ய வேண்டும்:

  •  நீங்கள் முழு நேர பணி செய்பவரா? Stock  analysis கற்றுக்கொள்ள நேரம் இல்லாதவரா ?
  •   நீங்கள் கம்பெனிகளை பற்றி படிக்க நேரம் உள்ளவர் ஆனால் Accounts மற்றும் கணக்கில் ஆர்வம் இல்லாதவரா?
  •  நீங்கள் அதிக நேரம் ஸ்டாக் மார்க்கெட்டில் நேரம் செலுத்த முடிபவரா?

    கவலைபடாதீர்கள் அனைவரும் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து லாபம் பெற முடியும். ஆனால் ஒவொருவரும் Stock  தேர்வு செய்வதில்  தனி தனி அணுகுமுறை தேவை.

(i) தனி நிறுவன பங்குகளில் இன்வெஸ்ட் செய்தல் 

    தொடர்ச்சியாக உங்களால் பங்குகளை ஆராய்ச்சி (Research) மற்றும் மதிப்பீடு    (Analysis) செய்ய நேரமும் விருப்பமும் இருந்தால் நீங்கள் தனி நிறுவன பங்குகளில் இன்வெஸ்ட் செய்யலாம். இதை நங்கள் 100% ஆதரிக்கிறோம். நீங்கள் ஸ்மார்ட் மற்றும் பொறுமையான இன்வெஸ்டராக இருந்தால் நீங்களும் பங்குச் சந்தையில் பெரிய லாபம் பெறலாம்.நேரடியாக தனி நிறுவன பங்குகளில் இன்வெஸ்ட் செய்வது அதிக  ரிஸ்க்கானது.

(ii) Index funds இன்வெஸ்ட் செய்தல்:

Index funds

    நேரடியாக தனி நிறுவனத்தின் பங்குகளில் இன்வெஸ்ட் செய்வதோடு Nifty50 போன்ற index funds  களிலும்  இன்வெஸ்ட் செய்வது மிகவும் அவசியம்.இது இருவகைப்படும்.

  • Actively Managed funds
  • Passively Managed funds.

இதில் தொடர்ந்து இன்வெஸ்ட் செய்வதன் மூலம் வருடத்திற்கு  10 % லாபம் பெற முடியம்.

 2. எவ்வளவு பணம் இன்வெஸ்ட் செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்:

     நீங்கள் இன்வெஸ்ட் செய்யும் பணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு  தேவைபடாத பணமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை என்பது வளர அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். சில காரணங்களால் 20 %  வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோன போன்ற காரணங்களால் இந்த ஆண்டு 40 %  வரை சில பங்குகள் நஷ்டம் அடைந்து மீண்டும் வளர்ச்சி அடைய தொடங்கின.

பங்குகளுக்கு நிதி ஒதுக்குதல் (Asset allocation):

    உங்களிடம் உள்ள மொத்த தொகையை எந்தெந்த பங்குகளில் இன்வெஸ்ட் செய்வது என்பதே நிதி ஒதுக்கீடு (Asset  Allocation ) எனப்படும். இதில் உங்கள் வயது பெரும் பங்கு வகிக்கிறது. உங்களுக்கு  இப்போது 40 வயது எனில் 70 % தொகையை பாங்குகளிலும் 30 % தொகையை நிரந்தர வருமானதிலும்  இன்வெஸ்ட் செய்யலாம்.அதிக அளவு ரிஸ்க் எடுக்க விரும்புவோர் அதிக சதவீதம் பங்குகளில் முதலீடு செய்யலாம்.  நீங்கள் வயதானவர் என்றால் பங்குச் சந்தை அதிக முதலீடு செய்வதற்கான இடம் இல்லை. உங்களின் ஓய்வு கால நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறான முடிவாகும்.   வயது குறைந்தவர் என்றால் உங்களால் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்திக்க காலம் உள்ளது ஆகவே அதிக ரிஸ்க் எடுக்கலாம்.

3.இன்வெஸ்ட் செய்ய டீமேட் அக்கௌன்ட் தொடங்குதல் :

 பங்குச் சந்தையில் முதலீடு செய்ய Demat Account தொடங்க வேண்டும். Demat Account மூலம் Shares, Bonds, Mutual funds,  Goverment securities களை வாங்கி விற்க முடியும். Demat Account  ஆள்  Shares  களை எளிதாக வாங்க  விற்க மற்றும் Hold  செய்ய இயலும். ZerodhaICICI Direct போன்ற புரோக்கர் களின் மூலம் நாம் Demat  account  தொடங்க முடியும். 



4.பல்வேறு நிறுவன பங்குகளில் இன்வெஸ்ட் செய்தல் (Diversify Investment):

  எவ்வாறு நீங்கள் இன்வெஸ்ட் செய்யம் பங்குகளை தேர்ந்தெடுப்பது  என்பதை காண்போம்.

  • ஒரே நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல். வெவ்வேறு நிறுவனத்தில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். 
  • உங்களுக்கு மிகவும் தெரிந்த தொழிலில் ஈடுபடும் பங்குகளில் இன்வெஸ்ட் செய்வது.
  • அதிக ஏற்ற இறக்க மாறுதல்களை கொண்ட பங்குகளில் இன்வெஸ்ட் செய்யாமல் இருப்பது.
  • Penny  stock  எனப்படும் சிறு நிறுவனங்களில் இன்வெஸ்ட் செய்யாமல் இருப்பது.
  • Bluechip நிறுவங்களில் அல்லது Nifty 50 இல் உள்ள நிறுவனங்களில்  இன்வெஸ்ட் செய்தல்.
  • Mutual  funds  இல் SIP  ( Systematic Investment  Plan )  மூலம் இன்வெஸ்ட் செய்தல்.

5.தொடர்ச்சியாக இன்வெஸ்ட் (Continuous Investment) செய்து கொண்டே இருத்தல்:

   இன்வெஸ்ட்மென்டில் மிகப்பெரிய ரகசியம் என்றல் அது தொடர்ந்து இன்வெஸ்ட் செய்வதே ஆகும். Warren  buffet  இன் கொள்கை என்ன வென்றால் அசாதாரணமான முடிவுகளை பெற அசாதாரணமான செயல்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறு சிறு முதலீடுகளை நீண்ட காலத்திற்கு செய்வதன் மூலம் அசாதாரணமான லாபத்தை அடைய முடியும் என்பதே ஆகும்.
    பங்குச் சந்தையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன வென்றால் நல்ல நிறுவனத்தின் பங்குகளை சரியான நியாமான விலையில் வாங்கி அதை நிறுவனம் நல்ல லாபம் தரும் வரை அல்லது உங்களுக்கு பணம் தேவை படும் வரை வைத்திருப்பதே ஆகும். நீங்கள் இவ்வாறு செய்தால் இடைப்பட்ட காலங்களில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் முடிவில் மிகப்பெரிய லாபத்தை அடைய முடியும். என்னை பொறுத்த வரை Intraday அல்லது day  trading என்பது சூதாட்டமே. நல்ல பங்குகளில் இன்வெஸ்ட் செய்து அதிக லாபம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 
                                                            நன்றி...
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

கருத்துரையிடுக

0 கருத்துகள்