HFCL நிறுவனமானது ஆப்டிகல் பைபர் கேபிள்ஸ், ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட், பவர் எலெக்டரானிக்ஸ் மற்றும் ப்ரோட்பன்ட் ஏகுய்ப்மென்ட் (Broadband Equipment) பொருட்களை டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களுக்காக தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா, சில ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5G சேவையை வழங்க அதற்கு தேவையான பைபர் கேபிளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5G சேவையை இந்தியாவில் வழங்க உள்ளது. அதற்கான ஆப்டிகல் பைபர் கேபிளை நாடு முழுவதும் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடகாவில் இரண்டாவது Wifi பவர்டு கிராமத்தை நிறுவியதன் காரணமாக HFCL ஸ்டாக் விலை இன்று காலை தொடக்கத்திலேயே 16% உயர்ந்தது.பைடீபட்டு என்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமத்தில் PM -WANI Village என்று அழைக்கப்படும் இணைய சேவையை நிறுவியுள்ளது. இதன் மூலம் 9000 வீடுகளுக்கு இணைய சேவையை வழங்க உள்ளது.
HFCL ஸ்டாக் விலை இன்றைய நிலவரம்:
HFCL ஸ்டாக் விலை இன்று தொடக்கத்தில் Rs 84.2 ஆக உயர்ந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை Rs 75.2 இல் முடிவடைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 20% உயர்ந்து Rs 87.1 (Upper Circuit) இல் முடிவடைந்துள்ளது. இது தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HFCL ஸ்டாக் விலை கடந்த மூன்று மாதத்தில் 225% திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்தஒரு மாதத்தில் மட்டும் 80% திற்கு அதிகமாக உயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. HFCL வரும் ஜூலை 12 நாள் கடந்த ஜூன் 30 உடன் முடிவடையும் காலாண்டிற்கான ரிசல்ட்டை வெளியிடும் என அறிவித்துள்ளது.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

0 கருத்துகள்