பங்குச்சந்தையில் புதிய முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை வார்த்தைகள் மற்றும் அதற்கான விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
| பங்குச்சந்தையின் அடிப்படை ( Basics of stock market) |
IPO (Initial Public Offer) என்றால் என்ன ?
IPO என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் முதன் முதலில் பங்குச்சந்தைக்கு அறிமுகப்படுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த நிறுவனம் ஆனது குறிப்பிட்ட பிரீமியம் தொகைக்கு பங்குகளை சிறு மற்றும் பெரிய முதலீட்டாளர்களுக்கு விற்கும்.
Premium:
ஒரு நிறுவனம் தனது பங்குகளுக்கு IPO வின் மூலம் விற்க நிர்ணயிக்கும் விலை பிரீமியம் ஆகும். எடுத்துக்காட்டாக கிளென்மார்க் லைப் சயின்ஸ் IPO வின் பிரீமியம் Rs 695 -720 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
GMP (க்ரெய் மார்க்கெட் பிரீமியம்) என்றால் என்ன ?
GMP என்பது IPO வின் போது அந்தப்பங்குகள் க்ரெய் மார்க்கெட் எனப்படும் மறைமுக சந்தையில் விற்கப்படும் மதிப்பு ஆகும்.
கிளென்மார்க் லைப் சயின்ஸ் IPO வின் GMP Rs 146 ஆக உள்ளது. IPO வில் பங்கின் விலை Rs 720 மற்றும் GMP Rs 146 ஆகவே இந்த பங்கு Rs 866 க்கு லிஸ்டிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Face value என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் மதிப்பை பங்குகளாக பிரிக்கும் பொழுது அதில் ஒரு பங்கின் முதன்மை விலை (initial value) Face value எனப்படும். இது Promoter களால் நிர்ணயிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ; ஒரு நபர் ஒரு நிறுவனம் தொடங்கும் பொழுது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் Face value 2 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டால் அவர் 50,௦௦௦ பங்குகளை (shares) பெறுவார்.
Face value : Rs 2 முதலீடு : Rs 1,00,000
1,00,000/2 =50,000 பங்குகள்
Promoter என்றால் என்ன?
ப்ரோமொடேர் என்பது ஒரு நிறுவனத்தை தொடங்குபவர்கள். இவர்களே அந்நிறுவனத்தின் முதன்மை பங்குதாரர்கள்.
Issue price என்றால் என்ன?
IPO வில் நிர்ணயிக்கப்படும் ப்ரீமியத்தை issue price என்கிறோம் .
listing Price என்றால் என்ன?
பங்குச்சந்தையில் (NSE , BSE ) முதல் நாளில் லிஸ்ட் செய்யப்படும் விலை listing Price எனப்படும். இது issue Price இல் இருந்து demand யை பொறுத்து மாறுபடும். demand அதிகமாக இருப்பின் lssue Price யை விட அதிகமாகவும். Demand குறைவாக இருக்கும் பட்சத்தில் Issue Price யை விட குறைவாகவும் இருக்கும்.
Close Price என்றால் என்ன?
ஒரு பங்கு அந்நாளின் இறுதியில் வர்த்தகமாகும் விலை close price எனப்படும். இதை Previous close என்றும் அழைப்பார்கள். இது முந்தைய நாள் இறுதியாக வர்த்தகமான விலை.
Open Price என்றால் என்ன?
ஒரு பங்கு அந்நாளின் தொடக்கத்தில் வர்த்தகமாகும் விலை Open price எனப்படும். இது Previous close price யை விட Demand யை பொறுத்து மாறுபடும்.
LTP (Last Traded Price ) என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் பங்கு கடைசியாக அல்லது சற்று முன் வர்த்தகமான விலை ஆகும்.
Gap up opening என்றால் என்ன?
ஒரு பங்கு அந்நாளின் தொடக்கத்தில் (previous close) முந்தைய நாளின் close Price யை விட அதிகமாக open ஆனால் அது Gap up opening எனப்படும்.
Gap down opening என்றால் என்ன?
ஒரு பங்கு அந்நாளின் தொடக்கத்தில் (previous close) முந்தைய நாளின் close Price யை விட குறைவாக open ஆனால் அது Gap down opening எனப்படும்.
Pre opening market session என்றால் என்ன?
Pre opening market என்பது காலை 9.00 AM to 9.15 AM க்கு இடைப்பட்ட நேரம். இது மார்க்கெட்டை சமநிலைப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. AMO எனப்படும் After market order மூலமாக வர்த்தகத்தின் தொடக்கத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் (Volatility ) இருக்கும். இதை தவிர்க்க Pre opening market session அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 15 நிமிடத்தில் AMO orderகள் place செய்யப்பட்டு மார்கெட் சமநிலையை அடையும். இந்த இடைப்பட்ட நேரத்தில் retail investor களால் வர்த்தகம் செய்ய இயலாது.
AMO ( After Market Order ) என்றால் என்ன?
After Market Order என்பது மார்கெட் செயல்படாத நேரங்களில் ஆர்டர் place செய்வதை AMO என்கிறோம். அதாவது விடுமுறை நாட்களிலோ அல்லது மார்கெட் முடிவடைந்த பின் மாலை 3.30 PM முதல் காலை 9.00 AM வரை order செய்வதாகும். இதன் மூலமாக Gap up opening மற்றும் Gap down opening நடைபெறுகிறது.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

0 கருத்துகள்