Advertisement

Coal India பங்குகள் 26% வளர வாய்ப்புள்ளது, கடந்த மூன்று மாதத்தில் 36% உயர்ந்துள்ளதா?- ICICI securities

 Coal  India  நிறுவனத்தின் இயக்கச்  செயல்திறன் (Operating  performance) வலுவாக உள்ளது. Coal India நிறுவனத்தின் தயாரிப்பு கடந்த ஏப்ரல்- செப்டம்பர் FY24  அரையாண்டில் 8.5 % இருந்து 10.5%அதிகரித்துள்ளது. இதற்க்கு SECL நிறுவனத்தின் தயாரிப்பு அதிகரித்ததே காரணம் என கூறப்படுகிறது.

coal india logo

    Coal  India  நிறுவன பங்கு விலை கடந்த மூன்று மாதத்தில் 36% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பொருளாதார அறிஞர்கள் இன்னும் 26 % அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  ICICI  securities  நிறுவனம் தொடர்ந்து Coal  India  நிறுவனத்திற்கான ரேட்டிங்கை Buy  என அறிவித்துள்ளது மற்றும் அதன் டார்கெட் விலை 325  இல் இருந்து 395  ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ICICI Securities படி, Coal India நிறுவனம் வலுவான தயாரிப்பு மற்றும் பங்கு விலை ஏற்றத்துக்கான வாய்ப்புகளுடன் கூடிய  ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. கால் இந்தியா நிறுவனம் H1FY24 இல் , CIL எனும் மின் துறையின் அதிகரித்துள்ள மின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது மற்றும் அதிக லாபம் தரும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கு (NRS) விநியோகத்தை அதிகரிக்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கூடுதலாக, உச்ச ஊதிய மசோதா இப்போது நிலுவையில் உள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், நிறுவனத்தில் இயற்கையான தொழிலாளர் குறைப்பு (Natural  attrition) காரணமாக ஊதியச் செலவு குறையும் என்று ICICI Securities கணித்துள்ளது மற்றும் அடுத்த நிதியாண்டில் (FY25 ) 9% டிவிடெண்ட்  வழங்கும் அளவுக்கு பண உருவாக்கம் இருப்பதாகவும், 150  பில்லியன் அளவிற்கான மூலதன செலவு இருப்பதாகவும் கணித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்