Advertisement

ஐடி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து ஏறுமா? அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி எப்படி இருக்கும்?

    

Top 5 IT shares in India, IT industry share price, IT industries growth
IT Industries growth

    ஐடி நிறுவங்களின் பங்குகள் கடந்த வருடங்களில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தையில்  ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்க்கு உலகம் டிஜிட்டல் மயம் ஆவதே காரணம். அமெரிக்கா கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டலை நோக்கி நகர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் அறிவித்துருந்தார். இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகள் நல்ல வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்டுகிறது.

     கடந்த காலாண்டில் ஐடி நிறுவனங்கள் நல்ல லாபத்தை ஈட்டி இருந்தன. இந்த ஆண்டும் ஐடி நிறுவனங்கள் அதிக அளவிலான ஆர்டர்களை பெற்றுவருகிறது. TCS  நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 5  லட்சமாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் மற்ற ஐடி நிறுவனங்களும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. விப்ரோ நிறுவனம் இந்த ஆண்டு Fresher களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


இந்த டாப் 5  ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளீர்களா ?

1 . TCS 

2.Tech  mahindra 

3 . Wipro  

4 . Infosys 

5 . HCL Technologies

   வல்லுநர்கள் மேலே உள்ள 5 நிறுவனங்களில் முதலீடு செய்ய அறிவுறுத்துகிறார்கள்.இதில் உள்ள முதல் மூன்று நிறுவனங்களை பற்றி பார்ப்போம்.

இவற்றையும் படியுங்கள் 

1.அடுத்த 5  ஆண்டுகளில் உங்களை கோடிஸ்வரன் ஆக்கும் 3  நிறுவன பங்குகள் , இதில் இன்வெஸ்ட் செய்துள்ளீர்களா?

TCS: 

    டாடா குழும ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி  சர்வீஸ் இன்  ஷேர் விலை 52 வார உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவன பங்குகள் 17 சதவிகிதத்திற்கு மேலாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து ஏற்றமடைய அதிக வாய்ப்புள்ளது. TCS ஷேர்களை  வாங்க பல புரோக்கர் நிறுவனங்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் குறுகிய கால டார்கெட் விலை ரூ 4060.00 என மதிப்பீடு செய்யபட்டுள்ளது.

TCS share price, TCS share target price
TCS Share price

Tech Mahindra:

    டெக் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் முந்தைய வருடத்தை காட்டிலும் 11.98  சதவிகிதம் லாபம் ஈட்டி இருந்தது. இதனால் ஷேரின் விலை நல்ல ஏற்றம் கொண்டுள்ளது. இது வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெக் மஹிந்திரா டார்கெட் விலை ரூ 1530  ஆக கணிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவன பங்குகள் 18 சதவிகிதத்திற்கு மேலாக உயர்ந்துள்ளது.

Tech mahindra share price, Tech mahindra share target price
Tech Mahindra share price
Wipro:

    விப்ரோ நிறுவன பங்குகள் கடந்த 6 மாதத்தில் 55  சதவிகிதத்திற்கு மேலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்பொழுது  52 வார உச்சத்தில் வர்த்தகமாகி கொண்டுள்ளது. விப்ரோ நிறுவனம் பல சிறிய மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாங்கி வருகிறது. அடுத்த 3  ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலரை கிளவுட் தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும். விப்ரோ டார்கெட் விலை ரூ 708.00  ஆக கணிக்கப்பட்டுள்ளது

Wipro share price, Wipro share target price
Wipro Share price


இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe



கருத்துரையிடுக

0 கருத்துகள்